Sunday, November 13, 2011

வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்:இதுதொடர்பாக இலங்கை தமிழரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது!

Sunday, November 13, 2011
வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இலங்கை தமிழரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாகுடி தெற்கை சேர்ந்தவர் ஆல்பர்ட் குரூஸ்(36). கடந்த 1989ல் இலங்கையில் இருந்து வந்த இவர், கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமுதா. சாராய வியாபாரி.
இந்நிலையில் ஆல்பர்ட் குரூஸ் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து வேதாரண்யம் டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் ஒரு பிளாஸ்டிக் பையில் 885 கிராம் எடையுள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பையின் மேல் ‘2005-2010 மேட் இன் ஆப்கானிஸ்தான்‘ என எழுதப்பட்டிருந்தது. அந்த பையில் இருந்த போதைப்பொருள், ஹெராயின் என்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஆல்பர்ட் குரூசை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போதைப்பவுடரை கொடுத்தது யார்? அதை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்தாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment