Sunday, November 13, 2011
பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி இலங்கை சம்பந்தமாக வெளியிட உத்தேசித்துள்ள மற்றுமொரு காணொளி தொடர்பில் உன்னிப்பான கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
செனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ள காணொளி தொடர்பில் இதுவரை மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்துறைப் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செயற்பாடுகளை முன்னெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் செனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சுமத்தி காணொளி ஆதரங்களை வெளியிட்டிருந்தது. இது குறித்து அரசாங்கம் பதில் வழங்கியதை அடுத்து, அது பொய்யானது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டதாகவும் சரத் திஸாநாயக்க கூறியுள்ளார்.
யுத்த காதலத்தில் நடந்தவை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை மூலம் உண்மை உலகத்திற்கு தெரியவரும் என்பதால், உலகத்தின் கவனத்தை திசைத்திருப்ப மேலும் காணொளியை வெளியிட செனல் 4 தொலைக்காட்சி முயற்சித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment