Sunday, November 13, 2011
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக இந்திய அதிகாரிகளை புலிகள் சந்தித்ததாக நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டில் இந்திய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்ட போதிலும் முதல் தடவையாக எரிக் சொல்ஹெய்ம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் புலிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எந்த இடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதனை எரிக் சொல்ஹெய்ம் வெளியிடவில்லை.
புலிகளின் சார்பிலும் இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் யார் சந்திப்பில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்த தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார்.
நோர்வே தலைமையிலான சமாதான உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதில் மிகவும் முக்கியமான பங்கினை திரை மறைவில் இருந்து அப்போது இந்தியாவை ஆட்சி செய்த பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உளவுப் பிரிவான றோவும் புலிகளும் சந்தித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் இராணுத்துறையில் விற்பன்னர் என்ற போதிலும் சர்வதேச விவகாரத்தில் பயிலுனர்-எரிக் சொல்ஹேய்ம்!
பிரபாகரன் இராணுத்துறையில் விற்பன்னர் என்ற போதிலும் சர்வதேச விவகாரத்தில் பயிலுனர் அளவிலான அறிவினை கொண்டிருந்ததாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துடன் தொடர்பில்லை என முதலில் பிரபாகரனும், பொட்டு அம்மானும் பாலசிங்கத்திடம் தெரிவித்தாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அதனை அவர்கள் ஒப்புக் கொண்டதாக பாலசிங்கம் தன்னிடம் குறிப்பிட்டதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமாதானத்தில் பலமான நாடு தலையிடுவதனை இந்தியா விரும்பவில்லை-எரிக் சொல்ஹேய்ம்!
இலங்கை சமாதான முனைப்புக்களில் பலம்பொருந்திய சர்வதேச நாடொன்று தலையீடு செய்வதனை இந்தியா விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கை பிளவு படுவதனை அனுமதிக்க முடியாது எனவும் இந்திய அதிகாரிகள் திட்ட வட்டமாக குறிப்பிட்டதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் இந்தியாவின் முக்கியத்துவத்தை மிகவும் தெளிவாக புரிந்து வைத்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக செயற்படுவது எவ்வளவு ஆபத்தானது என்பதனை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
2001ம் ஆண்டு முதல் பத்து தடவைகள் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment