Sunday, November 13, 2011
கொழும்பு கோட்டை வெல்ல வீதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்ணொருவரிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரியதாக கூறப்படும் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மோதரை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 21 தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கப்பம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கப்பம் கோருவதற்கு சந்தேகநபர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் தோண்டிய 9 பேர் கைது!
அம்பாறை நவகம்புர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதையல் தோண்டுவதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை அம்பாறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment