Sunday, November 27, 2011

புனர்வாழ்வழிக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் விடுதலை தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Sunday, November 27, 2011
புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் ஒரு தொகுதியினரை விடுதலை செய்யும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 42 பேர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் விடுதலை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ் குமார் தெரிவித்தார்.

இதன்படி இவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குமார் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, எஞ்சியுள்ள 680 புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment