மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச எல்லைப்பகதிகளை காணிகளை கைப்பற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுகோள்-இரா.துரைரெட்ணம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் (பத்மநாபா EPRLF)
Sunday, November 27, 2011மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்புற பிரதேசங்களில் 15000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அம்பாரை மாவட்டத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் , பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சைக்கொடி- சுவாமிமலை கிராமசேவகர் பிரிவு 135 சி பிரிவில் கெவிழியாமடு ,கோம்பஸ்தலாவ ,புளுக்குணாவ, பன்சன்கல, ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குரிய மேய்ச்சல்தரை, வேளாண்மைக்காணிகள், மேட்டுநிலப்பயிர்ச்செய்கை காணிகள் மற்றும் குளங்கள் நீர்நிலைகள் சிறியகாடுகள், குடியிருப்பு நிலங்கள் அடங்கிய பாரிய நிலப்பரப்பை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அமைப்புக்களும் அப்பகுதி மக்களும் என்னிடம் முறையிட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் இரு இனமக்களும் வாழ்ந்து வருவதால் நிச்சயமாக இவ்வாறான நடவடிக்கைகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும்.
இப்பிரதேச செயலாளர் பிரிவில் கால்நடைகளுக்குரிய மேய்சல் தரையும் மக்கள் வாழ்வதற்கான குடியிருப்பு காணிகளும் இப்பகுதி தமிழ் மக்களுக்கு இல்லாமல் போகும் நிலையும் ஏற்படும்.
எனவே இப்பகுதி தமிழ் மக்களின் சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் இச்செயல் பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் பிரதிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட செயலாளர் பட்டிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment