Sunday, November 27, 2011தமிழ் கத்தோலிக் செய்தி லங்கா இணையத்தள அறிமுக விழா 26 நவம்பர் 2011 அன்று பிசப் சவுந்தரம் மீடியா சென்ரரில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருள்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேராலும் குருக்கள் பேராலும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் தமிழ் கத்தோலிக்க செய்திகளை அறிக்கையிட உருவாக்கப்பட்ட தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தள முயற்சி வரவேற்கப்படவேண்டியதாகும.; இவ்விணையத்தளம் சிறப்பான விதமாக வளர்ந்து பணிபுரியப்போவது உறுதி எனத்தெரிவித்தார்.
இலங்கை மறை மாவட்டங்களின் தமிழ் கத்தோலிக்க செய்திகளை உத்தியோகபூர்வமாக அறிக்கையிடும் ஓர் இணையத்தளமாக இது செயல்ப்படும். இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மறைமாவட்டங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் செய்திகளையும் இவ்விணையத்தளத்தில் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்; இத்தள முயற்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்கள் இணைத்துக்கொள்ளக்கூடிய தகவல்கள் என்றும் வரவேற்கப்படும்.
இத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புக்களையும் இணையத்தள மின்அஞ்சல் மூலமாக தெரியப்படுத்துங்கள் என்று பிசப் சவுந்தரம் மீடியா இயக்குநரும் தமிழ் கத்தோலிக் செய்தி லங்கா இணையத்தள ஆசிரியருமான அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் தெரிவித்தார். இவ்விணையத்தளத்தை tcnlnet.com எனும் முகவரியில் பார்க்க முடியும்
No comments:
Post a Comment