Sunday, November 27, 2011

களனி பிரதேசத்தில் கடத்தப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்!

Sunday, November 27, 2011
களனி பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்ப்ட இளைஞன் ஒருவர் நிட்டம்புவ ஊராபொல பகுதியில் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடத்திச் சென்ற குழுவினர் தம்மை நிட்டம்புவ பிரதேசத்தில் கைவிட்டுச் சென்றதாக குறித்த இளைஞன் தமது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நிட்டம்புவ ஊராபொல பகுதிக்கு சென்ற உறவினர்கள் இளைஞனை அழைத்துச் சென்றுள்ளனர்.

வர்த்தகரான கயனந்த பெரேரா எனும் இளைஞனே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனிடம் களனி பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment