Thursday, November 24, 2011பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை அது குறித்த தகவல்களை வெளியிட முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
இந்த விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாதெனவும், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குற்றத் தடுப்பு பிரிவினர் செயற்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்படும் முறை தொடர்பாக கூறுவது கடினமான விடயமாகும் என்றும், விசாரணையின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை கைதுகள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment