Monday, November 21, 2011கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களை தெளிவுபடுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்த அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து பார்த்த பின்னர் அது தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா கூறுகின்றார்.
பொதுமக்கள் மற்றும் முறைப்பாட்டாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கையிலுள்ள விடயங்கள் நடைமுறை சட்டத்திற்கு அமைய செயற்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் உத்தியோகபூர்வ அறிக்கையை தயாரிக்கும் பணிகளை கடந்த 15 ஆம் திகதி நிறைவு செய்தது.
2002 அம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடக்கம் யுத்தம் நிறைவு பெற்ற கால கட்டம் வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் வகையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment