Monday, November 21, 2011

2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு!

Monday, November 21, 2011
2012 ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தமை தொடர்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன கருத்து வெளியிட்டார்.

தானும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த போது , தமது கையில் இருந்த ஆவணங்களை அங்கிருந்த பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அது சட்ட விரோத செயல் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயல் எனவும் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன சுட்டிக்காட்டினார்.

தமக்குள்ள ஜனநாயக உரிமைகளுக்கமைய ஒழுக்குப் பிரச்சினை ஒன்றை பாராளுமன்றத்தில் எழுப்பியதாகவும், அதனை ஆளுங்கட்சியினர் செவிமடுக்காது எதிரப்புத் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து தாம் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன மேலும் கூறினார்.

No comments:

Post a Comment