Monday, November 21, 2011எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய தீகல கனகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது
27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை எல்பிட்டிய இகல்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கிடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றியதை அடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment