Monday, November 21, 2011அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நாளை முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஏழு நாட்கள் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 30 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குழுநிலை விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இதற்காக 17 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாட்டினை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதற்கு முன்னைய தலைவர்கள் பெரிதும் பங்காற்றியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
1977 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டதுடன் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்து 95 ஆயிரம் பேரில் அனேகமானவர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
சுமார் 15 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
மலையக மக்களின் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மும்மொழி பயன்பாட்டின் அவசியத்தினை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment