Monday, November 21, 2011கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவ போராட்டக் குழுவினர் இன்று நடுக்கடலில் ஆர்ப்பாட்டம் செய்ய இருகின்றனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்க சுமார் 700 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டக் குழுவினர் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வலியுறுத்திள்ளனர். இந்நிலையில் இன்று, இடிந்தகரை பகுதியில் போராட்டக் குழுவினர் நடுக்கடலில் ஆர்ப்பாட்டம் செய்ய இருகின்றனர்.
உலக மீனவர்கள் தினமான இன்று, இடிந்தகரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 படகுகள் ஈடுபட போவதாகவும், படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை போராட்டக் குழு வெளிப்படுத்தபோவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன-. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கூடங்குளம் அணுமின் நிலையம், குடியிருப்பு பகுதிகளில் சுமார் 700 போலீசார் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, போராட்டக் குழு முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment