
Friday, November 18, 2011முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்வதற்கு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி தெரிவித்தார்.
இதற்கமைய மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment