Friday, November 18, 2011

பாதுகாப்பு பகுதியாக அறிவித்து தமிழக கடல் எல்லையில் மீன்பிடிக்க தடை விதிக்கலாம்: கடலோர காவல் படை பரிந்துரை!

Friday, November 18, 2011
சென்னை: தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும்போது, சிங்களர்களால் தாக்கப்படுகின்றனர். தமிழக அரசு பல தடவை இதுபற்றி தெரிவித்தபோதும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது.

சிங்களர்கள் சமீப காலமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை ஐகோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது கடலோர காவல் படை ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கும்போது, இந்திய கடற்படை கப்பல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கூறி உள்ளனர். இதை ஏற்க இயலாது. இந்திய ஆயுதக்கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல இயலாது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 1974 மற்றும் 1976-ம் ஆண்டின் உடன்படிக்கைகளுக்கு இது முரணானது.

இந்திய மீன்பிடி படகுகள் என்ற போர்வையில் இந்த பகுதி வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்யலாம். எனவே இந்தியா-இலங்கை சர்வதேச கடல் பகுதியை மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும்.இவ்வாறு அந்த பதில் மனுவில் கடலோர காவல் படை கூறியுள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment