Friday, November 18, 2011

தீர்ப்பினை பொன்சேக்கா ஏற்கனவே அறிவார்: சஜீவ சேனசிங்க!

Friday, November 18, 2011
வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு மூன்று வருட சிறை தண்டனையும் ஐயாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பில் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நியூஸ்பெஸ்டுக்கு கருத்து வெளியிட்டார்.

இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் நாம் தீர்ப்பினை ஏற்றுக்கொள்கிறோம். நாம் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பினையும் ஏற்றுக்கொள்வோம். எனினும் இந்த தீர்ப்பு தொடர்பில் எமக்கு பாரிய விமர்சனம் ஒன்று உள்ளது.

அதேபோன்று எத்தகைய தீர்ப்பு வழங்கப்படுமென பொன்சேக்கா ஏற்கனவே அறிந்திருந்தார். இன்று நாம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் எமது பிள்ளைகள் பாடசாலை செல்வதற்குமான சூழலை முன்னாள் இராணுவத் தளபதியே ஏற்படுத்தினார்.

உலகில் எந்வொரு நாட்டிலும் இல்லாதவாறு தடுத்து வைப்பதற்கான அதிகாரம் உள்ள நிருவாகம் இலங்கையில் காணப்படுகிறது. உங்களுக்கு உரிமை உள்ளது. வீடுகளில் முடங்கிக்கிடக்காமல் முன்வருமாறு நாம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

No comments:

Post a Comment