Thursday, November 10, 2011அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் யாப்புக்கு முரணாக செயற்படமாட்டாது என பிரதமர் டி.எம்.ஜயரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
செயற்பாடு குறைந்த தொழில் முயற்சிகள் மற்றும் குறைந்த பயன்பாட்டையுடைய சொத்துக்களுக்கு புத்துயிர் அளித்தல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்தினை கூறினார்.
இந்த சட்டமூலம் குறித்து எதிர்கட்சி தேவையின்றி அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சொத்துக்களை அரசாங்கம் கொள்ளையிட மாட்டாது என்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன சபையில் தெரிவித்தார்.
விவாதத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தாயசிறி ஜயசேகர இதுவொரு தூர நோக்கற்ற சட்டமூலம் எனக் கூறினார்.
இலாபமீட்டுகின்ற நிறுவனங்களை பொறுப்பேற்கக் கூடாது என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment