Thursday, November 10, 2011

புலிகளை தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி முக்கிய பங்கு வழங்கியது – லால்காந்த!

Thursday, November 10, 2011
புலிகளின் ஈழக் கோட்பாட்டை தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி முக்கிய பங்கு வழங்கியதாக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற முதலாளித்துவ கோட்பாடுகளை பின்பற்றும் கட்சிகளுடன் கூட்டமைப்பு வைத்துக் கொண்டதில் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று 2003ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வைத்துக் கொண்ட கூட்டணி பல தீமைகளையும் ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில வெற்றிகளை அடைந்த போதிலும், சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு ஜே.வி.பி கூட்டணியும் ஓர் காரணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஜனநாயகமற்ற ஓர் அரசாங்கத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஜே.வி.பிக்கும் பங்கு இருக்கின்றது என்பதனை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜே.வி.பி கட்சி இந்த ஆட்சியை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியை தோற்கடித்து மக்கள் நட்பான ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி தொடர்ந்தும் சுயதீன இடதுசாரி கட்சியாகவே இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் அடிப்படைக் கொள்கைகளும் கோட்பாடுகளும் மாறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment