Thursday, November 10, 2011வர்த்தக பெறுமதியுடைய நகரை அண்மித்த காணிகளில் அமைந்துள்ள சிறைச்சாலைகளை மீண்டும் கிராமப் பகுதிகளில் நிறுவுவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தின் ஆரம்பகட்ட திட்டமிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம் வெலிக்கடை சிறைச்சாலையை இரண்டு பிரிவுகளாக்கி மஹர மற்றும் வட்டரெக்க ஆகிய பகுதிகளுக்கு மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
காலி மற்றும் மாத்தறை நகரங்களில் அமைந்துள்ள சிறைச்சாலைகளையும் வேறு கிராமப் புறங்களில் நிறுவுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து மீள சமூகமயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு நகர சிறைச்சாலைகளில் போதிய வசதிகள் காணப்படவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர நகர சிறைச்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்த காணிகள் அதிக வர்த்தக பெறுமதியைக் கொண்டிருத்தல் மற்றும் கைதிகளுக்கு போதிய இடவசதிகள் இல்லாமை போன்ற விடயங்களே இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான பிரதான காரணிகளாகும்.
No comments:
Post a Comment