Tuesday, November 15, 2011

திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது!

Tuesday, November 15, 2011
திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் திருமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற வீதி, மனையாவெளி, திருகோணமலையைச் சோ்ந்த கே.சசிக்குமார் என்பவரே கைது செய்யப்பட்டதாகத் தெரிய வருகின்றது.

கடந்த 13ம்திகதி இரவு இலிங்கநகர் பகுதியிலுள்ள தனியார் எரிபொருள் நிலையமொன்றிற்குச்சென்று கார் ஒன்றிற்கு மூவாயிரம் ரூபாய்க்குப் பெற்றோல் அடிக்குமாறு கடமையில் உள்ள ஊழியரிடம் கூறினார். ஊழியர் பெற்றோலை காருக்கு அடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது பாதுகாப்புக் காவலாளி நோட்டமிட்டுக்கொண்டிருந்த வேளையில் இலக்கத்தகடு மறைக்கப்பட்டிருப்பதை அவதானித்த சந்தர்ப்பத்தில் ஊழியரிடம் பாதுகாப்பு காவலாளி இலக்கம் மறைக்கப்பட்டிருப்பது பற்றி கூறினார்.அச்சந்தர்பத்தில் காரில் வந்தவர் பெற்றோலுக்குரிய பணத்தை வழங்காது தப்பிச் சென்றுள்ளார்.

அதனையடுத்து காரை பின்தொடர்ந்து சென்று பொலிஸாரிடம் கூறிய சந்தர்பத்தில் இவர் கைது செய்யப்பட்டதாகவும், டபிள்யூ.பீ.கே.சீ.1069 எனும் காரில் வந்த வாகன திருத்துநரையே பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரொஹான் ஐயவர்தன முன்னிலையில் ஆஐர்படுத்திய வேளை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர் பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள எரிபொருள் நிலையத்திலும் கடந்த 04ம்திகதி இரண்டாயிரம் ரூபாய்க்கு பெற்றோல் நிரப்பி விட்டுப் பணம் செலுத்தாமல் திருட்டுத்தனமாகத் தப்பிச்சென்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment