Tuesday, November 15, 2011பீஜிங்: பாகிஸ்தானுக்கு மேலும் 2 அணு உலைகளை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தானில் மின் உற்பத்திக்காக அணு உலை தொழில்நுட்பத்தை வழங்க சீனா முன்வந்தது. அதன்படி பஞ்சாப் மாகாணம் சாஸ்மா பகுதியில் 2 அணு உலைகள் அமைக்க சீனாவுடன் 2009ம் ஆண்டு பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த மே மாதம் அணு உலை அமைக்கும் பணிகளை பிரதமர் யூசுப் ரசா கிலானி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளை நிறுவன பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக சீன தேசிய அணு கழகமும் பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இதை சீன அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லீ வீமின் கூறுகையில், பாகிஸ்தானில் மேலும் 2 அணு உலைகளை சீனா அமைத்து தரும் திட்டம் எதுவும் இல்லை.
அணு உலைகளை சீன நிறுவனம் அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணுமின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, சர்வதேச அணு ஆராய்ச்சி கழகம் மற்றும் சர்வதேச விதிமுறைகளின் படிதான் சீனா உதவி செய்து வந்துள்ளது. அணுமின் உற்பத்தி நிலையம் அமைக்க முதலீடும் செய்துள்ளது. இவ்வாறு லீ வீமின் கூறினார்.
No comments:
Post a Comment