Tuesday, November 15, 2011லண்டன்: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். பெண்களிடம் இவ்வளவு நேரம்தான் ரகசியம் தங்கும் என்று. ஆனால், பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காது என்ற சமீபத்திய ஆய்வு முடிவை நம்பித்தான் ஆக வேண்டும்.
பெண்களுக்கான முகஅழகு கிரீம் பிராண்ட்களில் ஒன்று சிம்பிள். அதன் சார்பில் இணைய தளம் வழியாக இந்த ‘அதிமுக்கிய’ ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களிடம் ஒரு பரம ரகசியம் சொன்னால் சராசரியாக எவ்வளவு நேரம் அதை பாதுகாப்பார்கள் என்பதுதான் கேள்வி. 3,000 பெண்களிடம் இது கேட்கப்பட்டது.
ரகசியமா... அதை உடனே யார்கிட்டயாவது சொல்லலைன்னா மண்டை வெடிச்சுடும் என்று 10ல் ஒரு பெண் தெரிவித்தார். தனிப்பட்டதோ, அதிமுக்கியமானதோ, மேட்டர் எதுவானாலும் கவலையில்லை என்பதுதான் ஹைலைட். அடுத்தவர் ரகசியத்தை கேட்கும் சுகமே அலாதி என்றவர்கள் 85 சதவீதம் பேர்.
யாரைப் பற்றியது அந்த ரகசியம் என்பதை பொருத்து பெரும்பாலும் பெண்கள் அதை முதலில் காதில் போடுவது கணவர் அல்லது அம்மா அல்லது நெருங்கிய நண்பரிடம். ஏன் ரகசியத்தை போட்டு உடைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, மனதில் இருந்து பாரத்தை இறக்கினால்தான் நிம்மதி என்று ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் பதிலளித்தனர். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் காக்க முடியாது என்றவர்கள் 3ல் இரண்டு பேர்.
இதுபற்றி சிம்பிள் நிறுவன செய்தி தொடர் பாளர் கூறுகையில், ‘ரகசியத்தை காப்பதில் பெண்களின் மனப் போராட்டம் இந்த ஆய்வில் வெளிச்சமாகி விட்டது. இருந்தாலும், தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் அதிகம் பேருக்கு குறைந்த நேரத்தில் ரகசியத்தை தெரிவிப்பது சாத்தியமாகி விட்டதும் காரணமாக இருக்கலாம்’ என்றார்.
No comments:
Post a Comment