Saturday, November 05, 2011
புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறைந்தபாடில்லை –ஹெல உறுமய
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறைந்தபாடில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய கட்சி தூய்மையான நாளை (பிவித்துரு ஹெட்டக்) என்னும் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் சகல அபிவிருத்தித் திட்டங்களுக்கு உச்ச அளவில் பங்களிப்பு வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
சில பலம்பொருந்திய மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்ச்சித் திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை, கல்வி, சுகாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment