Saturday, November 5, 2011

கொழும்பு துறைமுக வாசலை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Saturday, November 05, 2011
துறைமுகத்தில் நிலவும் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்கலன் வாகன ஊழியர்கள் குழுவொன்று கொழும்பு துறைமுக வாசலை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்கலன் வாகன ஊழியர்கள் நேற்றிரவு இந்த எதிர்ப்பு நடிவடிக்கையை ஆரம்பித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள சுங்க திணைக்கள கணணி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நேற்றைய தினம் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை அடிப்படையாக கொண்டு இந்த எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் சுமார் 200 கன்டேனர் வாகனத்தின் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.



இந்த விடயம் தொடர்பில் துறைமுகத்தின் சுங்கப் பிரிவினரிடம் வினவியபோது, கணணி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாலை வேளையில் கொள்கலன் துறைமுகத்திற்குள் உட்பிரவேசிப்பதும் அங்கிருந்து வெளியேறுவதிலும் தாமதம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் நேற்றிரவு இந்த தாமதம் வழமைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதன் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment