Saturday, November 05, 2011
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதிநெருக்கடியை தீர்க்க உலக நாடுகளும் சர்வதேச நிதியமைப்பும் (ஐஎம்எப்) உதவ வேண்டும் என் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி 20 நாடுகள் அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரான்ஸ் அதிபர் சர்கோசி, ஜெர்மனி பிரதமர் மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் 6வது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உலக நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்காத வகையில், நிதித் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது மற்றும் அனைத்து நாடுகளில் பரவலாக முதலீடு செய்வது தொடர்பாக இந்த உச்சி மாநாடு விவாதித்து வருகிறது. எனினும், இந்த மாநாட்டில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உலக அளவில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. அத்துடன் உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது. எனவே, மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண உதவ வேண்டிய பொறுப்பு எல்லா நாட்டுக்கும் உள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய யூனியன் நிதி நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு தேவையான நிதியுதவியை வழங்க ஐஎம்எப் முன்வர வேண்டும். இது தொடர்பாக, இந்தியா ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது.
கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ஐரோப்பிய நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் அந்த நாட்டுக்கு ஸி6.37 லட்சம் கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ள போதிலும், அதை ஏற்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரீஸ் அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவை நட்பு நாடாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது வரவேற்க த்தக்கது. இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
தலைவர்கள் சொன்னவை
றீ ஐரோப்பிய நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
றீ இத்தாலி கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
றீ கிரீஸ் பிரச்னைக்கு தீர்வு காணாதவரை ஐரோப்பிய யூனியனுக்கு நிதியுதவி வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியாது என சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூறியுள்ளார். மேலும் சீன கரன்சியான யுவான் மதிப்பை உயர்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
றீ ஐரோப்பிய யூனியனில் கிரீஸ் நீடிக்க வேண்டுமா என்பதைவிட, யூனியனின் பொருளாதார ஸ்திரத்தன்மைதான் மிகவும் முக்கியம் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment