Wednesday, November 2, 2011

ஐ.தே.க வின் தீர்மானத்திற்கு பிக்குகள் முன்னணி கண்டனம்!

Wednesday, November 02, 2011
ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் மீட்டியாகொட குணரத்ன தேரர் உள்ளிட்ட மேலும் மூன்று தேரர்களை பதவி நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மான்ததை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

இது கட்சி செயற்குழுவின் ஏகமனதான தீர்மானம் அல்ல எனவும் கட்சித் தலைவரின் ஒருதலைப்பட்ச தீர்மானமாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்த முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைத்துவம் வகிப்பதால் மாத்திரம் ஐக்கிய பிக்கு முன்னணியின் பிரதிநிதிகளை ரணில் விக்ரமசிங்கவால் நீக்கிவிட முடியாது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிரேஷ்ட உறுப்பினர்களில் பலர் கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய பிக்குகள் முன்னணி இத்தகைய நிலைமையின் கீழ் எவ்வாறு வெற்றிபெற முடியும் என வினவியுள்ளது.

கட்சி யாப்பினை மீறுகின்ற ரணில் விக்ரமசிங்க மீதே ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்பொருட்டு கட்சி செயற்குழுவிற்கு ஞானம் பிறக்கவேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ஐக்கிய பிக்குகள் முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் நிலைத்திருப்பதற்கான திருத்தங்களும் பழிவாங்கல்களும் மாத்திரம் தொடர்ந்து இடம்பெறுவதாக அந்த முன்னணி விக்ரமசிங்கவுக்கு நினைவூட்டியுள்ளது.

கிராம - நகர மற்றும் விகாரைகள் மட்டத்தில் நிலைமையைத் தெளிவுபடுத்துவதற்கு தேரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து இனங்களும் சமயங்களும் மதிப்பளிக்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஒரே மாதிரி பேசக் கூடிய தலைமைத்துத்தை உருவாக்குவதற்கு இடமளிப்பதே இந்த யுகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு ஞானம் பிறக்கவேண்டும் என பிரார்திப்பதாவும் ஐக்கிய பிக்குகள் முன்னணி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த உத்தியோகபூர்வ பிக்குகள் அமைப்பு என சுட்டிக்காட்டி கடந்த 27 ஆம் திகதி இடமபெற்ற செயற்குழு கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment