Wednesday, November 02, 2011
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேறு நாட்டு அரசாங்கங்களுடன் பேச்சு நடத்துவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க மற்றும் கனடா விஜயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; அமைச்சர் விஜயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியிருக்கவில்லை. தேசிய பிரச்சினை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு நாட்டுக்குள்ளே உள்ளது. இங்கிருந்தே அதற்கு தீர்வு எட்டப்பட முடியும்.
வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. பாராளுமன்றத்தின் மூலமோ யாப்பு திருத்தத்தின் மூலமோ தான் இதற்கு தீர்வு எட்ட முடியும் என தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியல்ல என்றும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment