Wednesday, November 2, 2011

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் துமிந்த!

Wednesday, November 02, 2011
பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை அழைத்துச் செல்லும் பொருட்டு உறவினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நேற்றிரவு 8.30 அளவில் அவரை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசிந்ர கமகே தெரிவித்தார்.

வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு துமிந்த சில்வா உடல்நிலை தேறியிருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment