Wednesday, November 02, 2011
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போது இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு கனடா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பினர்.
நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஹாபர் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் பதிலளித்தார்.
2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க முடியாது என கனடா அறிவிக்கவில்லை என்றும் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்து அந்த நாடு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் வெளிவிகார அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment