Wednesday, November 02, 2011
அமைதியின்மை நிலயிவியதால் கரந்தெனிய மற்றும் ஹெப்ம பிரதேங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.
இதேவேளை அமைதியின்மை ஏற்படக் காரணமாக இருந்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெற்றோல் குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் நிலவிய அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பி்ட்டார்.
கரந்தெனிய பகுதியில் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான ஆய்வு கூடம் இயங்கிய கட்டடம் மீது கிராம மக்கள் தீயிட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.
அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
அமைதியின்மையை ஏற்படுத்தியவர்கள் வீடுகள் நான்கிற்கும் தீவைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகி்ன்றனர்.

No comments:
Post a Comment