Wednesday, November 02, 2011
படையினர் வசம் சிக்கியிருந்த வீட்டினைப் பார்வையிடச் சென்ற வேளை படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் 13 வருடங்களின் பின்னர் குற்றமற்றவரென நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டு உள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் படையினரால் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞனே 13 வருடங்களின் பின்னர் நேற்று திங்கட்கிழமை யாழ்.நிதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
கிளிநொச்சி திருநகர் தெற்கை சேர்ந்த நவரத்தினம் பாலசிறி என்ற இளைஞரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார். 1998ஆம் ஆண்டு மாங்குளம் மூன்று முறிப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து 'ஜெயசிக்குறு' படை நடவடிக்கைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கையில் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் படையினரால் கைது செய்யப்பட்டிருந்ததாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர் காலி மற்றும் யாழ். சிறைச்சாலைகளில் விளக்கமறியலிலும், இறுதியாக பூசாவிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நேற்று (31.10.2011) நடைபெற்றது.
மேற்குறிப்பிட்ட நபரினால் கொடுக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ்.மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சு.பரமராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment