Tuesday, November 29, 2011தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறுகிறது.
முன்னதாக காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் வாசஸ்தலத்தில் சந்திக்கவிருக்கும் அகாஸி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஜப்பானிய தூதரக வட்டாரங்கள் தெரித்தன.
அதேநேரம், நேற்றைய தினம் யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
No comments:
Post a Comment