Tuesday, November 29, 2011அனுராதபுர தமிழ் சிறைக்கைதிகளை பார்வையிடுவதர்ற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரும், ஜே.வி.பி கிளர்ச்சி குழு உறுப்பினருமான உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களை பார்வையிட முயற்சித்த போதிலும் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் மாவீரர் தின அனுஸ்டிப்புக்களில் ஈடுபட்ட முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கைதிகள் அவ்வாறு மாவீரர் தின அனுஸ்டிப்புக்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய சிறைகளிலும் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு எந்தவிதமான சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தரணிகளுடன் சென்ற தம்மை சிறைச்சாலைக்குள் அனுமதிக்கவில்லை என்பது குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை பார்வையிட சட்டத்தரணிகளுக்கு அனுமதியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment