Tuesday, November 29, 2011ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலை செய்ய முயற்சித்ததாக இருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது புதல்வர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவசம் கனரட்னம் என்பவரின் புதல்வரான கனரட்னம் ஆதித்யன் மற்றும் கந்தவம் நகுல் எனப்படும் ரஹ்வீத் ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலளார் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஆகியோரை கொழும்பில் வைத்து படுகொலை செய்வதற்கு குறித்த நபர்கள் முயற்சி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிராக 13 சந்தேக நபர்களை ஆஜர்படுத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment