Tuesday, November 29, 2011

ஜப்பானினால் இலங்கைக்கு ஆற்றப்பட்ட சேவை தொடர்பில் நோர்வே வெளியிட்ட கருத்து தவறானது என விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்!

Tuesday, November 29, 2011
ஜப்பானினால் இலங்கைக்கு ஆற்றப்பட்ட சேவை தொடர்பில் நோர்வே வெளியிட்ட கருத்து தவறானது என விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.

இலங்கை சமாதான முனைப்புக்கள் தோல்வியடைந்தமை குறித்த நோர்வேயின் அறிக்கையில் ஜப்பானின் பங்களிப்பு விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையை முழுமையாக இன்னமும் படிக்கவில்லை எனவும், இதனால் அது பற்றி விரிவான கருத்துக்களை வெளியிட முடியாது தெரிவித்துள்ளார்.

எனினும், சில விடயங்களை ஒப்புக் கொள்ளும் அதேவேளை சிலவை தொடர்பில் உடன்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தும் அரசாங்கத்தின நடவடிக்கை; வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான மாறுபட்ட புள்ளி விபரத் தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment