Sunday, November 13, 2011
புலித் தலைவர்கள் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் – நோர்வே அறிக்கை

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் என நோர்வே சமாதான முனைப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 மே மாதம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய தூதரகங்களைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தமிழ் அரசியல்வாதி சந்திரநேரு ஆகியோரையும் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் வெள்ளைக் கொடியுடன் முன்னரங்கப் பகுதியில் சரணடையுமாறு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில மணித்தியாலங்களின் பின்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரையில் புலிகளின் கெரில்லா யுத்தம் தொடரும் என்றே நோர்வே கருதியாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மோதல்களை தவிர்ப்பதற்கு நோர்வே பல்வேறு ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் சரணடைவதனை உறுதி செய்ய, உதவி வழங்கும் நாடுகள் சில முனைப்பு காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா இந்த முனைப்புக்களில் பங்கெடுக்கவில்லை எனவும், பொதுமக்கள் உயிரிழப்புக்கள் வரையறுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சிரேஸ்ட தலைவர்களைத் தவிர்ந்த சாதாரண போராளிகளுக்கு மன்னிப்பு வழங்க அரசாங்கம் இணங்கியது.
புலிகள் ஆயுதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஒப்படைத்தல்
புலி உறுப்பினர்கள் ஐ.நா அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைதல்
பொதுமக்களுக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க உதவிகளை வழங்குவதாக உதவி வழங்கும் நாடுகள் இணங்கியிருந்தமை போன்ற நான்கு பிரதான காரணிகளின் அடிப்படையில் அமெரிக்காவும் நோர்வேயும் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.
புலிகள் சரணடைவதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றே நோர்வே கருதியது.
புலிகளின் முக்கிய உறுப்பினர்களையும் அவர்களது குடும்பங்களையும் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்றில் சில இராஜதந்திரிகள் முனைப்பு காட்டி வந்தனர்.
எனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு பிரபாகரன் இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment