Sunday, November 13, 2011
டெஹ்ரான்: ஈரான் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் கமாண்டர் உள்பட 17 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் புறநகர் பகுதியில் உள்ளது மலார்ட் நகரம். இதன் அருகில் உள்ள பிட் கானேவில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. இங்கு அணு ஆயுதங்களும் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கிடங்கில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கிடங்கில் இருந்த ஆயுதங்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. அருகில் உள்ள குடியிருப்புகளில் ஜன்னல்கள், கதவுகள் நொறுங்கின. மக்கள் பீதி அடைந்தனர். இந்த விபத்தில் முதலில் 27 பேர் பலியானதாக செய்தி வெளியானது. ஆனால், கமாண்டர் உள்பட 17 பேர் பலியானதாக ஈரான் ராணுவ மூத்த கமாண்டர் மோஜ்தபா கலேதி உறுதிப்படுத்தினார்.
மற்றொரு கமாண்டர் ரமேஜான் ஷெரீப் கூறுகையில், ÔÔஆயுத கிடங்கில் தீவிரவாதிகள் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த விபத்தில் ஏராளமான ஆயுதங்கள் நாசமானதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment