Sunday, November 13, 2011
விசா கலாவதியாகி அல்லது போலி விசாவின் மூலம் நாட்டினுள் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடயகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தகைய வெளிநாட்டவர்களைக் கைதுசெய்வதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா கூறினார்.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல்கள் 0094-115 32 90 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
விசா இன்றியும், மோசடி முறைகளைக் கையாண்டும் இலங்கையில் தங்கியுள்ள சில வெளிநாட்டவர்கள் பல்வேறு பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
இத்தகைய வெளிநாட்டவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி அவர்களை கைது செய்வதற்கான விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டிலுள்ள நிறுவனங்களில் இத்தகைய வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பின் அந்த நிறுவனங்களும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை விசா இன்றியும் விசா சட்டங்களை மீறும் வகையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சூலானந்த பெரேரா கூறினார்.

No comments:
Post a Comment