Sunday, November 13, 2011

புலம்பெயர்ந்தவர்களுக்காக செனல் 4 - அரசாங்கம்!

Sunday, November 13, 2011
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த நிலையில் வாழுகின்ற இலங்கை தமிழர்களுக்காகவே, செனல் 4 தொலைக்காட்சி செயற்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

செனல் 4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பில் புதிதாக வெளியிட்ட காணொளி தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் சம்பாதிக்கும் நோக்குடன் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை, அங்கிருந்து இலங்கைக்கு நாடுகடத்தாதபடிக்கு செய்யும் நோக்கில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கைதுகளும், பல்வேறு வன்முறைகளும் இடம்;பெற்று வருவதாக இந்த காணொளியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்களையும் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment