Sunday, November 13, 2011சோமாளிய கொள்ளையர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ஜப்பானிய கப்பல்கள் இரண்டு இன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுள சூரிய இதனை தெரிவித்துள்ளார்.
தமது இலக்கை நிறைவு செய்ததன் பின்னர், இந்த கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இரண்டு நாட்டு கடற்படை பிரதானிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment