Wednesday, November 2, 2011

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பிர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக நோர்வே அரசாங்கம் நிதியுதவி!

Wednesday, November 02, 2011
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பிர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக நோர்வே அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.

புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 57 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனம் முன்னெடுக்கும் புனர்வாழ்வுத் திட்டங்களுக்காகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹில்டி ஹரல்ட்ஸ்டா் ( HILDE HARALDSTAD ) மற்றும் புலம்பெயர்தலுக்கான சர்தேச நிறுவனத்தின் இலங்கைகான பிரதிநிதி றிச்சர்ட் டன்சிகர் (RICHARD DANZIGER ) ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி புதிய வாழ்க்கை ஒன்றை தொடங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது முக்கியமான விடயம் என இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நோர்வே அரசாங்கம் தொடர்ச்சியாக பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் தெரிவித்தது.

No comments:

Post a Comment