Wednesday, November 2, 2011

சீனாவில் டேங்கர் லாரிகள் வெடித்து 7 பேர் பலி ; 200 பேர் காயம்!

Wednesday, November 02, 2011
பீஜிங்: சீனாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரிகள் திடீரென வெடித்து சிதறியதில் 7 பேர் பலியானார்கள். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சீனாவில் உள்ள குய்சூ மாகாணம் புகுவான் நகர நெடுஞ்சாலையில், 70 டன் எரிபொருள் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் நேற்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் 7 பேர் உடல்சிதறி பலியானார்கள்.

அந்த பகுதியை சேர்ந்த 200க்கும் அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களில் 20 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். லாரிகள் வெடித்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுற்றியுள்ள பல கட்டிடங்கள் இடிந்து மோசமாக சேதமடைந்தன. பல வாகனங்கள் நொறுங்கின. இது தீவிரவாத தாக்குதலா என்பது தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment