Monday, November 21, 2011

புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் முன்னாள் தலைவி தமிழினியின் விளக்கமறியல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது!

Monday, November 21, 2011
புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் முன்னாள் தலைவி தமிழினியின் விளக்கமறியல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி இன்று வழங்கினார்.

தமிழினி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்ததையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னர் பல தடவைகள் தமிழினியின் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போதும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காமை காரணமாக அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வந்தமை தெரிந்ததே.தமிழினி மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்

No comments:

Post a Comment