Monday, November 21, 2011ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்துள்ள கிளர்ச்சிக்குழுவினைப் பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்குலக நாடுகள் முயற்சி செய்து வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்படுவதனை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மேற்குலக நாடுகளின் ஆயுத விற்பனைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
என்.எம். பெரேரா ஊடக நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடியாத நிலைமையினால் ஜே.வி.பி.யில் சர்ச்சை வெடித்துள்ளது என சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
நியோ லிபரல் முறைமை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அதுவே ஜே.வி.பியையும் தாக்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment