Monday, November 21, 2011

லக்ஷர் ஈ தொய்பா புலிகளைப் பயன்படுத்தி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சி புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!

Monday, November 21, 2011
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லக்ஷர் ஈ தொய்பா அமைப்பு, புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநில காவல்துறையினருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் புலி உறுப்பினர்கள் பதுங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லக்ஷர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பு புலிகள் மற்றும் சீக் தீவிரவாதிகளை பயன்படுத்தி தமது நாச வேலைகளை மேற்கொள்ள முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மும்பையின் நாவி பிரதேசத்தில் புலி உறுப்பினர்கள் பதுங்கியிருக்கக் கூடும் என புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நாவியில் புலி உறுப்பினர்கள் பதுங்கியிருப்பதாகவும், கடந்த சில மாதங்களாக அவர்களது நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீக் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்தும் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment