Thursday, November 10, 2011இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முனைப்புக்கள் குறித்து நோர்வே அறிக்கை வெளியிடவுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக நோர்வே நாளைய தினம் சமாதான முனைப்புக்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட உள்ளது.
முன்னாள் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்டு; ஆர்மிடேஜின் தலைமையில் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வே அரசாங்கம் தொடர்ந்தும் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளித்து வருகின்றமை விக்கிலீக்ஸ் தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் இதனால் சமாதான முனைப்பு குறித்த மதிப்பீடு நம்பகமாக அமையாது எனவும் அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை, ரத்து செய்யப்பட்டமை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து அறிக்கையில் தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment