Thursday, November 10, 2011

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை நிறுத்தி சமாதனத்திற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு-இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி!

Thursday, November 10, 2011
அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை நிறுத்தி இலங்கைக்கு சமாதனத்திற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகிஸ்வரா தெரிவித்துள்ளார்.

கனடாவின் “த ஸ்டாh”; என்ற பத்திரிகைக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தி குறித்த பத்திரிகையில் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

தர்ஸ்மன் அறிக்கையினை அடிப்படையாக கொண்டு அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தர்மஸ்மன் அறிக்கையானது உத்தியோக ப+ர்வமான அறிக்கை அல்லவென குறிப்பிட்டுள்ள உயர்ஸ்தானிகர் கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாவதற்கு முன்னர் இவ்வாறான செய்திகள் வெளியிடுவது பொருத்தமானதாக அமையாது எனவும் குறிப்பிட்டார்.

இது சுயாதீன விசாரணைக்கு பாதகம் ஏற்படுத்தும்.

அத்தடன் இவ்வாறான நடவடிக்கையானது இலங்கையின் சமாதானத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமையும் எனவும் இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகிஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment