Thursday, November 10, 2011இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் மாலைதீவில் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இடம்பெயர் தமிழ் மக்கள் மீள் குடியேற்றம், நல்லிணக்க பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைதீவு சங்கரீ லா ஹோட்டலில் இன்று மாலை இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவி;க்கப்படுகிறது.
யதார்த்தமான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய பிரதமர் மன் மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலாணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment