



Wednesday, November 09, 2011அட்டு: சார்க் நாடுகள் மாநாடு மாலத்தீவில் உள்ள அட்டு நகரில் 10, 11ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலத்தீவு சென்றார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில், சார்க் நாடுகளின் நிலைக்குழு கூட்டம் நேற்று அட்டுவில் நடந்தது. இதில் சார்க் நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்திய வெளியுறவு செயலாளர் ராஜன் மேதாயும் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீரும் சந்தித்து பேசினர். இருநாடுகளுக்கு இடையேயான முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் பேச்சு விவரம் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது. மேதாயும் பஷீரும் நேரடியாக சந்தித்து பேசும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், வர்த்தகத்துக்கு ஏற்ற நட்பு நாடு என்று இந்தியாவை பாகிஸ்தான் அங்கீகரித்தது. இந்த சூழ்நிலையில் இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment